ஓட்டப்பிடாரம் அருகே N.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா N. புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மேற்கொண்டார்.
அப்போது பள்ளி வளாகத்திற்கு உள்ளே தேங்கி இருந்த மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து காலை முதலமைச்சரின் காலை உணவு சிற்றுண்டி திட்டத்திற்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவினை ஆய்வு செய்து தொடர்ந்து மாணவ மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவினை அருந்தினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-எஸ்.நிகில், ஓட்டபிடாரம்.