தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி நான்கு போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றிருந்தது. நேற்று நான்காவது, கடைசி போட்டி ஜோகனஸ்பர்க்கில் நடந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணி 20 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 283 ரன்கள் குவித்தது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 109 ரன்களும், திலக் வர்மா 120 ரன்களும் குவித்தனர்.
கடின இலக்கைத் துரத்திய தென் ஆப்ரிக்க அணி 18.2 ஓவரில் 148 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 135 ரன்னில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
-அருண்குமார் கிணத்துக்கடவு.