கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை தமிழக கேரளா எல்லை பகுதியான
திவான்சாபுதூர் ரயில்வே கேட் பகுதியில் இருந்து மீனாட்சிபுரம் மற்றும் கேரளா செல்லும் சாலையில் குடியிருப்பு பகுதி, ஹோட்டல்கள், மருத்துவமனைகள், டாஸ்மார்க் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ள பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள், ஹோட்டல் கழிவுகள், மதுபான கூட கழிவுகள் என அதிக அளவில் குவிந்து கிடந்தன இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் இருப்பதை கண்டும் கூட அதை அப்புறப்படுத்தாமல் வேடிக்கை பார்த்து வந்தது திவான்சாபுதூர் ஊராட்சி நிர்வாகம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் குப்பை கிடங்குக்கு நேற்று இரவு தீ வைத்து எரிக்கப்பட்டது இதனால் அப்பகுதியில் புகை அதிக அளவில் வெளியேறியதால் அப்பகுதியை கடக்கும் பொழுது வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள் மேலும்
அப்பகுதியை பொதுமக்கள் நடந்து கடக்கும் பொழுது மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள் இந்நிலையில் இப்பகுதி பொதுமக்களுக்கு சுவாசப் கோளாறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது மேலும் இப்பகுதி பொதுமக்களுக்கு இதனால் சுவாசப் பிரச்சனை மற்றும் நோய் தொற்று பரவினால் திவான்சாபுதூர் ஊராட்சி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்று இப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உண்மையை உரக்கச் சொல்லும் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.