கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு பி வி எம், எஸ் பி கார்டன். மயானத்தில் கொட்டப்படும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக அந்தப் பகுதி
பொது மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை மாவட்டம் ஒத்தக்கால் மட்டன் பகுதியில் அமைந்துள்ள எஸ் பி கார்டன் இங்குள்ள மயானத்தில் அந்தப் பகுதியைச் சார்ந்த மக்கள் இறந்துவிட்டால் இந்த மயானத்தில் தான் அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அருகே உள்ள இடத்தில் எரியூட்டும் மயானம் கட்டித் தருவதாக கூறப்பட்டது இருப்பினும் இந்த மயானத்தில் தான் நல்அடக்கம் செய்து வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டு காலமாக இந்த மயானத்துக்குள் குப்பைகளை கொட்டி வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக அங்குள்ள அதிகாரிகளிடம் மக்கள் பலமுறை எடுத்துரைத்தும் எந்த பயனும் இல்லை என தெரிகிறது. குப்பை கொட்டும் இடம் இதுவல்ல எனவும் அதிகாரிகள் கூறுகின்றன இருப்பினும் இதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று மற்றும் குப்பையில் இருந்து வரக்கூடிய துர்நாற்றம் பல்வேறு நோய்களை உருவாக்குவதாக மக்கள் கூறுகின்றனர். மயானத்தை மீட்கவும் குப்பையை அங்கிருந்து அகற்றுவதற்கும் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்து வருவதோடு மாவட்ட ஆட்சியரிடமும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கும் பொது மக்கள் இருப்பினும் எந்தப் பயனும் அளிக்கவில்லை என தெரிவதனால் மக்கள் கவலை கொள்வதோடு அடுத்த கட்ட நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் சாலை மறியல் மற்றும்
போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறுகின்றனர்.
இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மயானத்தை மீட்க வேண்டும் என்றும் துர்நாற்றம் வீசும் குப்பைகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.