கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் டேம் பஸ் ஸ்டாப். அப்பகுதியில் குடிமன்னவர்கள் அதிக அளவு குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து பிறருக்கு சேதப்படுத்தும் வகையாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசும் அவல நிலை உருவாகி உள்ளது.
லட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்ட பஸ் நிலையத்தின் அவல நிலை. இதுபோன்ற குடிமன்னர்களை கண்டு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியில் வரும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரத்தில் இது போன்ற தவறுகள் நடப்பது சகசமாக பரவி வருகிறது என புகார்கள் அளித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-திவ்யக்குமார், வால்பாறை.