தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தூத்துக்குடி மாநகர பகுதி மற்றும் மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி பிஸ்கட் பாக்கெட் உள்ளிட்ட நிவாரண உதவிகளை தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக்கழக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் வழங்கினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர் பல்வேறு பகுதிகளில் மழை நீர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர் இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்க தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் அறிவுரை கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அப்பகுதி பாதிக்கப்பட்ட பொதுமக்களை தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழகம் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பாதிக்கப்பட்ட பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து
ஆறுதல் கூறிய மற்றும் சூசைப்பாண்டியாபுரம் செல்வநாயகிபுரம் நந்தகோபாலபுரம் போளல்பேட்டை சத்யா நகர் முல்லக்காடு சுனாமி காலனி டிஎம்சி காலனி கருணாநிதி நகர் மற்றும் மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்துக்கூட்பட்ட பாண்டியாபுரம் எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு அரிசி காய்கறிகள் பிஸ்கட் பாக்கெட் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார் இந்நிகழ்வில் ஏராளமான தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.