மகாகவி பாரதியாரின் 143 வது பிறந்தநாள் விழா அரசு மற்றும் பலதரப்பு மக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரதியார் பிறந்த மண்ணான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லம் மற்றும் பாரதியார் மண்டபத்தில் பல்வேறு கட்சியினர் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் சார்பில் பாரதியாருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் ஏராளமான தவெக தொண்டர்கள் மகாகவி பாரதியார் மணிமண்டபத்திற்கு வருகை தந்து அங்கு அமைந்துள்ள பாரதியாரின் திருவருடவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் எட்டையாபுரம் தவெக மகளிர் தொண்டர்கள் ஏராளமாக கலந்துகொண்டு பாரதியார் பிறந்தநாள் விழாவில் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர் கட்சியினர் அனைவரும் மகாகவி பாரதியாரின் சிலை முன்பாக நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.