கந்தர்வகோட்டை அருகே இந்தியாவின் முதல் செய்தித்தாள் வெளிவந்த தினம் கடைபிடிக்கப்பட்டது.
மாணவர்கள் தினந்தோறும் செய்தித்தாள் வாசிக்க வேண்டும் என அறிவுரை.
கந்தர்வகோட்டை ஜன 29: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் இந்தியாவில் முதல் செய்தித்தாள் வெளிவந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டது.தலைமை ஆசிரியர் தமிழ் செல்வி தலைமை வகித்தார்.
இந்நிகழ்வினை தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், பட்டதாரி அறிவியல் ஆசிரியர் ரகமதுல்லா ஒருங்கிணைத்து பேசும்பொழுது இந்தியாவில் முதல் செய்தித்தாள் 1780 ஆம் ஆண்டு ஜேஆண்டுஅகஸ்டஸ் ஹிக்கியின் தி பெங்கால் கெசட் வெளியிடப்பட்டது . அதன்பின், இந்தியப் பத்திரிகை உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மாறுபட்ட ஒன்றாக வளர்ந்துள்ளது, இது நாட்டின் கலாச்சார, மொழி மற்றும் அரசியல் செழுமையை பிரதிபலிக்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுதந்திரத்திற்குப் பிறகு, ஜனநாயகத்தை வளர்ப்பதில் செய்தித்தாள்கள் முக்கிய பங்கு வகித்தன.
பத்திரிகைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகத் தொடர்ந்து செயல்படுகின்றன,
இந்த நாள் பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி என்னதான் இன்று வளர்ந்து, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக ஊடகங்கள் வாயிலாகவும், செல்போன், லேப்டாப் என தொழில்நுட்பக் கருவிகள் வாயிலாகவும் உலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் ஒருசேரப் பார்க்க முடியும் என்றாலும், காலைப் பொழுதில் செய்தித்தாள் படிப்பதுடன் அன்றைய நாளைத் தொடங்குவது என்பது உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களின் பழக்கமாக இருக்கிறது. என்று பேசினார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு தினந்தோறும் நாளிதழ்களை படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.