மூணாறு பேராலயத்தின் கிளை பங்காக திகழும் எல்லப்பட்டி பங்கின் கிளை பங்கு தேவாலயமான குண்டலை எஸ்டேட் புனித அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் 53 ஆம் ஆண்டு திருவிழா 23ஆம் தேதி துவங்கப்பட்டு 26 ஆம் தேதி நிறைவு பெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
23 மற்றும் 24 ஆம் தேதிகளில் சிறப்பு தியானம் நடைபெற்றது.தியானத்தை சிறப்பிப்பதற்காக வந்த அருட்தந்தை மெண்டிஸ் சித்ராபுரம்,25 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் தேவாலயத்தில் ஜெபமாலை பிரார்த்தனைகள் நடைபெற்றது. அதன் பின்னர் மாலை 5:30 மணி அளவில் குண்டலை ஈஸ்ட் டிவிஷனில் இருந்து கொடிப்பவணி மற்றும் 2025 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் மகா ஜூபிலி வருடமாக கொண்டாடப்படுவதின் பாகமாக விஜயபுரம் மறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பங்குகளில் புனித யாத்திரையாக கொண்டுவரப்பட்டுள்ள புனித சிலுவையையும் தேவாலயத்திற்கு ஜெபமாலை பிரார்த்தனைகளுடன் கொண்டுவரப்பட்டது.
தேவாலயத்திற்கு கொண்டுவரப்பட்ட புனிதமான கொடி உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. திருப்பலியை சிறப்பித்த அருட்தந்தை பிலிப் ஆரோக்யராஜ் மேகமலை,திருப்பலி நிறைவடைந்த உடன் மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் KCYM இளைஞர்கள் தலைமையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 9:00 மணிக்கு ஜெபமாலை பிரார்த்தனைகளுடன் ஆடம்பர திருப்பலி நடைபெற்றது.
ஆடம்பர திருப்பலியை நிறைவேற்றிய அருட்தந்தை மைக்கேல் மதுரை,அதன் பின்னர் வேளாங்கண்ணி அன்னையின் திருசுரூபங்கள் , புனித அந்தோனியார் திருசுரூபங்கள் வைத்து திருப்பவனி நடைபெற்றது.திருப்பவனியில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வீடுகளில் இருந்து தேவாலயத்திற்கு கொண்டுவரப்பட்ட புனித வேளாங்கண்ணி அன்னையின் புகைப்படங்கள் மற்றும் சுரூபங்கள் வைத்து திருப்பவனி குண்டலை ஈஸ்ட் டிவிஷன் வரை சென்று தேவாலயத்திற்கு கொண்டுவரப்பட்டது .
2026 ம் ஆண்டிற்கான கொடி எடுக்கும் குடும்பங்களையும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இறுதியாக அன்பின் விருந்துகள் வழங்கப்பட்டு குண்டலை எஸ்டேட் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தின் 53 ஆம் ஆண்டு திருவிழா நிறைவடைந்தது. திருவிழா நிகழ்வில் பங்குத்தந்தை அலெக்ஸாண்டர் பிலிப், மற்றும் துணை பங்கு தந்தை டின்டோ பவுலோஸ், மற்றும் நூற்றுக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-மணிகண்டன் கா
மூணாறு கேரளா.