தூத்துக்குடி மாவட்டம் : பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் துவக்கி வைத்து வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கி பாராட்டினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை சார்பாக ஆயுதப்படை மற்றும் அனைத்து உட்கோட்ட காவல்துறையினருக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
அதன்படி அரை இறுதிப் போட்டிக்கு தகுதியான தூத்துக்குடி நகரம் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்ட காவல்துறை அணியினருக்கிடையே நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட அணியினர் வெற்றி பெற்றும், ஆயுதப்படை-II மற்றும் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட அணியினருக்கிடையே நடைபெற்ற போட்டியில் ஆயுதப்படை-II அணியினரும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
மேற்படி தூத்துக்குடி நகரம் மற்றும் ஆயுதப்படை-II அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியை (20.01.2025) மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் துவக்கி வைத்தனர்.
பின்னர் மேற்படி போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி நகர உட்கோட்ட அணியினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசுகோப்பை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுனைமுருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.