திருநெல்வேலி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிப்ரவரி 6 மற்றும் 7-ஆம் தேதி சுமார் ரூ.9369 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், 45,485 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் முதல்வருக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.என். நேரு, கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ வி மார்க்கண்டையன்
தூத்துக்குடி மேயர் மேயர் ஜெகன் பெரியசாமி, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.