கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியாறு அணை மற்றும் ஆழியாறு பூங்கா எதிரே உள்ள பழங்கால மரங்களை அழிக்க முயற்சிப்பதற்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் கண்டனம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொள்ளாச்சி வால்பாறை செல்லும் சாலையில் ஆழியாறு அணை மற்றும் ஆழியாறு பூங்கா உள்ளது. ஆழியாறு பூங்கா எதிரே உள்ள பழங்கால மரங்களை அழிக்க முயற்சிப்பதாக புகைப்படங்களுடன் நாளிதழ்களில் செய்தி வெளியாகி இருப்பது வேதையளிக்கிறது.
ஆழியாறு பூங்கா எதிரே உள்ள கடைகளுக்கு அருகில் உள்ள பழங்கால மரங்களை கடைக்காரர்கள் தன் கடைகளுக்கு அருகிலுள்ள இடங்களை ஆக்கிரமிப்பு செய்வதற்காக இடையூறாக உள்ள மரங்களை நூதன முறையில் அகற்றுவதாக தெரிகிறது. இதற்கு மா.வெற்றிவேல் ஆகிய நான் இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன்.
தன் சுயநலத்திற்காக பழங்கால மரங்களை அழிக்க நினைப்பது தவறு. அந்த மரங்களில் ஏராளமான பறவைகள் வாழ்கிறது. பறவைகளின் வீட்டை பாதுகாக்க, பசுமையை பாதுகாக்க, இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை கோரிக்கை விடுக்கிறது.
இதுகுறித்து பசுமைக்குரல் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜெ.மகேந்திரன் தெரிவித்துள்ள அறிக்கையில், ஆழியாறு பூங்கா எதிரே உள்ள சாலையோர மரங்கள் இருப்பது, வெயில் காலங்களில் நிழலுக்கு அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும், பழமையான மரங்களை இப்படி வேர்களை வெட்டி மரங்களின் பலத்தை குறைத்து தானாகவே மரங்கள் காய்ந்து விழுவது போன்ற சூழ்நிலை உருவாக்கும் நிகழ்வை மரங்களை அழிக்க நினைப்பவர்கள் நினைக்கிறார்கள் இதை பசுமைக்குரல் அறக்கட்டளை வன்மையாக கண்டிக்கிறது. அரசு அதிகாரிகள் மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.