தமிழ்நாடு முழுவதும் இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பு சேர்ந்த அரசு ஊழியர்கள் தமிழ்நாடு முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வு திட்டத்தை மீட்டெடுத்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளான;
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
* 01.04.2003-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை, கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
* காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான தூக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.
* தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளார் அரசாணை எண்.243 நாள்:21.12.2022-ஐ ரத்து செய்ய வேண்டும்.
* கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையில் உள்ள பணி மேம்பாடு (CAS) ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்க வேண்டும்.
* அரசின் பல்வேறு துறைகளில் 30% இருக்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்படுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டது உடனடியாக வழங்கிட வேண்டும்.
* சிறப்பு காலம் வரை ஓவியம் சோறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் MRB செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.
* 2002-2004 வரை தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் பணி காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
* சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விளாத்திகுளம் வட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஏராளமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் TNGEA தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாவட்ட தலைவர் ஆனந்தராஜ், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க இணைச்செயலாளர் பாலமுருகன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் மூர்த்தி, ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மயில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்ட பொருளாளர் சந்தனமாரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.