தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலநம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவன் மனைவி சீத்தாலட்சுமி (65). இந்த தம்பதியின் மகள் ராமஜெயந்தி (48), பூவன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் ராமஜெயந்தி தனது கணவர் விஷ்வாவுடன் ஏற்பட்ட தகராறில் கடந்த 3 ஆண்டுகளாக தனது தாயாருடன் வசித்து வந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதற்கிடையே இன்று மாலை 4 மணி வரை இவர்களது வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பார்த்தபோது படுக்கை அறையில் தாய் – மகள் இருவரும் இறந்து கிடந்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மர்ம ஆசாமிகள் தாய் – மகள் இருவரையும் முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளனர். மேலும் இருவரது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்ற விபரம் தெரியவந்தது. தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அல்பர்ட் ஜான், விளாத்திகுளம் டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் தூத்துக்குடியில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். 2பேரின் உடல்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தாய், மகள் இருவரையும் கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.