கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள முடிஸ் பேருந்து நிலையம்பகுதியில் இன்று போதைப்பொருள் மதுவிலக்கு விழிப்புணர்வு கலைக்கூடம் நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்த கலை நிகழ்வில் பொதுமக்களை எப்படி காப்பாற்றுவது என்பதுகுறித்து ஆடல் பாடல் மூலமாகவும் நடைமுறையில் நடப்பதை எப்படி தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் தேயிலை தோட்ட தொழிலாளிகள் என அனைவரும் நிகழ்ச்சியை கண்டனர். பொதுமக்களுக்காக அவர்கள் இந்த நிகழ்வை நடத்தினார்கள் பொதுமக்களும் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக வால்பாறையில் இருந்து,
–திவ்யக்குமார் செந்தில் குமார்.