1மதுக்கரை மெகா சிட்டி குரங்கு சிட்டியாக மாறி வருகிறது… அச்சத்தில் பொதுமக்கள்…. 

கோவை மாவட்டம் மதுக்கரை நகராட்சி 10வது வார்டு பகுதியில் உள்ள மெகா சிட்டி எனும் இடத்தில் குரங்குகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாடம் படும் துயரங்களை கண்ணீர் மல்க கூறுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் கூறுகையில் :-


கோவை மதுக்கரை நகராட்சி 10வது வார்டு பகுதியில் உள்ள மெகா சிட்டி இந்த பகுதியானது கோவை மாநகராட்சி எல்லை முடிவிலும் மதுக்கரை நகராட்சி தொடங்கும் இடத்திலும் உள்ளது இந்த மெகா சிட்டி குடியிருப்பு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு குரங்குகள் இப்பகுதியில் புகுந்து பொதுமக்களுக்கு மிகவும் இடையூறுகளை செய்து வருகிறது இது குறித்து மதுக்கரை நகராட்சி அலுவலகத்திலும், வனத்துறையிடம் புகார்கள் கூறியிருந்தோம் பிறகு வனத்துறை சார்பாக குரங்கை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது அந்த கூண்டிலும் அந்த குரங்குகள் சிக்கவில்லை மாறாக வளர்ப்பு நாய்களை குரங்குகள் கடித்து குதறி நாய்கள் உயிருக்கு போராடக்கூடிய நிலை உள்ளது.

இங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம் வளர்ப்பு நாய்களுக்கு இந்த கதி என்றால் எங்கள் குழந்தைகளையும் எங்கள் முதியவர்களையும் நாங்கள் எப்படி பாதுகாக்க முடியும் வெறுமனே ஒரு கூண்டு வைத்ததோடு இல்லாமல் இந்த குரங்குகளை முறையாக பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று மதுக்கரை நகராட்சிக்கும் வனத்துறைக்கும் கேட்டுக்கொள்கிறோம். இதே நிலை நீடித்தால் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை இணைத்து மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம் என்று இதன் மூலம் தெரிவித்துக் தெரிவித்துக் கொள்கிறோம்.


மக்கள் விழிப்புணர்வு அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் திரு M M ஹாரூன் அவர்கள் கூறுகையில்:-

பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இது போன்ற வனவிலங்குகள் மனித மோதல்கள் நடப்பது இப்போது அதிகரித்து வருகிறது இதை தடுக்க முறையான அணுகுமுறையை சம்பந்தப்பட்ட நிர்வாகம் செய்து தர வேண்டியது கட்டாய கடமை இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் முறையாக மதுக்கரை நகராட்சி இடமும் வனத்துறையிடமும் புகார் அளித்தும் சம்பிரதாயத்திற்கு கூண்டை வைத்து குரங்கை பிடிக்கின்றோம் என்ற பெயரில் தன்னுடைய கடமைகளை நிறைவேற்றியதாக மார்தட்டிக் கொள்ளாமல் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மதுக்கரை நகராட்சிக்கும் வனத்துறைக்கும் பொறுப்பாகும் இங்குள்ள நாய்களைப் பார்த்தால் எந்த அளவிற்கு குரங்குகளால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

இது போன்ற தாக்குதல்கள் இங்கு வசிக்கும் குழந்தைகள் மீதோ அல்லது முதியவர்கள் மீதும் நடந்தால் என்ன ஆகும் என்பது கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை ஆகையால் உடனடியாக மதுக்கரை நகராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து இப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விட வேண்டும் இல்லை என்றால் மக்கள் விழிப்புணர்வு அமைப்பும் இப்பகுதியில் வாழும் பொதுமக்களும் இணைந்து சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் சாலையில் மிகப்பெரிய ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தயாராக உள்ளோம் ஆகையால் இந்த பிரச்சனையில் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுத்து மெகா சிட்டியில் வாழும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M M H.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts