புதைப்பதற்கு இடமில்லாமல் தவிக்கும் பொது மக்கள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள வால்பாறை நகராட்சிக்குட்பட்ட கல்லறை தோட்டத்தில் உடல்களை புதைப்பதற்கு இடம் இல்லாமல் முன்னதாக புதைக்கப்பட்ட உடல்களை  தோண்டி எறிந்து விட்டு தற்போது வரும் இறந்துபோன உடல்களை புதைப்பதற்கு அடிதடி வரக்கூடிய அளவிற்கு அவல நிலையில் வால்பாறை நகராட்சி கல்லறை தோட்டம் உள்ளது.

https://www.facebook.com/share/r/16mxpSNJfP/?mibextid=wwXIfr

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறைக்கு மின் மயானம் வேண்டுமென்று இப்பகுதியில் பலமுறை பொதுமக்கள் புகார்கள் அளித்தும் மனுக்கள் கொடுத்தும் போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த நவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வால்பாறை சுற்றியுள்ள 56 எஸ்டேட் பகுதிகளில் கல்லறை தோட்டங்கள் வெகு தூரமாக உள்ளது. வால்பாறை வட்டாரப் பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் மின் மயானம் அமைத்து தர வேண்டும் என மிகுந்த வருத்தத்துடன் பொதுமக்கள், வால்பாறை வாகன ஓட்டுநர்கள்,வியாபாரிகள், எஸ்டேட் தொழிலாளிகள் ஆகிய அனைவரின் கோரிக்கைகளும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து

செய்தியாளர்

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts