
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் (BPL) பட்டியலை மறுஆய்வு செய்து புதிய பெயர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி P.பரமசிவம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்து அவர் அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது
வால்பாறை நகராட்சியில் கடந்த 2004-ம் ஆண்டு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் அந்தப் பட்டியலில் உள்ளவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் இப்பகுதியில் இல்லை ஆனால் தற்போது உண்மையாகவே வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பல குடும்பங்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் விடுபட்டுள்ளன.
அரசு நலத்திட்டங்கள் பெறுவதற்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் வங்கிகளில் மானியத்துடன் கூடிய கல்விக்கடன் பெறுவதற்கும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான சான்றிதழ் முன்னுரிமை அளிக்கிறது.
தற்போது தகுதியிருந்தும் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால்
மாணவர்கள் அரசு நலத்திட்டங்களை பெற முடியாமல் வேதனை அடைகின்றனர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைவதால் தேவையற்ற கால விரயமும் பண விரயமும் ஏற்படுகிறது.
வால்பாறை பகுதியில் தாழ்த்தப்பட்ட மற்றும் நலிந்த பிரிவினர் அதிக அளவில் வசிப்பதைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் விடுபட்ட தகுதியுள்ள நபர்களை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு உரிய பரிந்துரை வழங்க வேண்டும் என பரமசிவம் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
இக்கோரிக்கை குறித்து கள ஆய்வு செய்தபோது பல மாணவர்கள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் தகுதியிருந்தும் தங்களை இந்தப் பட்டியலில் இணைக்க முடியாமல் தவித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என இப்பகுதி மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-𝚂𝚃𝙰𝚁 𝙼.சுரேஷ்குமார்.













