உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யும் நூதன மோசடி மக்களே உஷார்

இது போலி என்று நினைத்தேன் ஆனால் உண்மையிலேயே எனக்கு ₹50,000 கிடைத்தது நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் – உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யும் நூதன மோசடிமக்களே உஷார்!!

கோவை: சமீபகாலமாக சமூக வலைதளங்களில் குறிப்பாக வாட்ஸ்அப் செயலியில் உங்களுக்கு 50,000 ரூபாய் ரொக்கப்பரிசு கிடைத்துள்ளது என்ற கவர்ச்சிகரமான செய்திகளுடன் ஒரு சில இணையதள இணைப்புகள் (Links) வேகமாகப் பரவி வருகின்றன. இதனை நம்பி கிளிக் செய்யும் பொதுமக்கள் தங்களது பணத்தையும், தனிப்பட்ட தரவுகளையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

https://www.facebook.com/share/r/16mxpSNJfP/?mibextid=wwXIfr

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

​மோசடி நடப்பது எப்படி?

​மோசடி நபர்கள் dgzz.ebqdp.xyz போன்ற விசித்திரமான பெயர்களைக் கொண்ட போலி இணையதளங்களை உருவாக்குகின்றனர். அந்த இணைப்பை கிளிக் செய்தவுடன் ஏதோ ஒரு பிரபல நிறுவனத்தின் பெயரில் உங்களுக்குப் பரிசு விழுந்திருப்பதாகத் தோன்றும் அதனைப் பெற உங்கள் பெயர் தொலைபேசி எண் மற்றும் வங்கி விவரங்களை உள்ளிடச் சொல்லும். சில நேரங்களில், இந்தச் செய்தியை 10 குழுக்களுக்குப் பகிருங்கள் என்றும் கட்டாயப்படுத்தும்.

​ஆபத்துகள் என்ன.?

​உங்கள் மொபைலில் உள்ள ரகசியத் தகவல்கள் மற்றும் ஓடிபி (OTP) ஆகியவற்றை இந்தத் தளங்கள் திருடக்கூடும்,
உங்கள் வங்கி விவரங்களைப் பயன்படுத்தி உங்கள் கணக்கிலிருந்து பணத்தை மோசடி செய்ய வாய்ப்புள்ளது,
​இந்த இணைப்புகளைத் திறக்கும்போது உங்கள் மொபைலில் வைரஸ் மென்பொருள்கள் தானாகவே பதிவிறக்கம் ஆகி உங்கள் போனை முடக்கக்கூடும்.

அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்குரிய லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள்.
​இலவசம் அல்லது அதிகப் பணம் தருவதாகக் கூறும் எந்தவொரு தளத்தையும் நம்ப வேண்டாம்.
​இது போன்ற செய்திகளை மற்றவர்களுக்குப் பகிராமல் தவிர்ப்பது நல்லது.
​பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற சைபர் க்ரைம் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அனைவரையும் விழிப்புடன் இருக்கச் செய்யுங்கள்.

இலவசப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி அறிமுகம் இல்லாத இணையதள லிங்குகளை (Links) கிளிக் செய்யாதீர்கள். உங்களின் ஒரு நொடி கவனக்குறைவு உங்கள் வங்கிச் சேமிப்பையும் தனிப்பட்ட ரகசியங்களையும் பறிக்கக்கூடும். டிஜிட்டல் உலகில் தேவையற்ற ஆசை ஆபத்தானது விழிப்புணர்வே நமது பாதுகாப்பு என்ற சிந்தனையோடு

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
-ஸ்டார் சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts