விசில் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம், அந்த சத்தம் காணாமல் போய்விடும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையாபுரம், அயன்கரிசல்குளம், வெம்பூர்,புதூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 அதிமுக வாக்குறுதிகள் துண்டு பிரச்சாரம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சரும், தற்போதைய அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜு பேசுகையில் “விசில் கிசில் அதை பத்தி எல்லாம் நம்ம கவலைப்பட வேண்டாம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அது சும்மா கேக்குறதுக்கு கொஞ்ச நேரம், அந்த சத்தம் எவ்வளவு வேகமா வருதோ அதே வேகத்தில் போய்விடும். தமிழகம் முழுவதும் சாராயம், கஞ்சா போதைப்பொருள் பழக்கம் இந்தியாவில் எந்த மாநிலத்தையும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் உள்ளது. சிறுமிகளைக் கூட தற்போது பள்ளிகளுக்கு அனுப்ப பயமாக உள்ளது, இந்த ஐந்தாண்டுகளில் சட்ட ஒழுங்கு கெட்டுள்ளது. பால்,பஸ் கட்டணம், மின்கட்டணம் உயர்வு, இந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு முறையான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காமல் துப்பு கட்ட ஆட்சியாக உள்ளது. நாட்டில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் உள்ள முதலமைச்சராக உள்ளார் என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து புதூர் பஜார் பகுதியில் கடைக்கடையாக பிரசுரங்களை வழங்கினார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், புதூர் ஒன்றிய செயலாளர்கள் தனபதி, தனஞ்செயன், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், ராமச்சந்திரன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சத்தியா, புதூர் நகர செயலாளர் ஆண்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்புச் செயலாளர் மோகன், சிறுபான்மை அணி சதீஷ், குட்லக் செல்வராஜ் மற்றும் பாஜக, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts