
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள தெருவிளக்குகள் மற்றும் உயர் மின் கோபுர விளக்குகள் இருந்தும் பயனில்லை. பல நாட்களாக இப்பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை. வால்பாறை நகராட்சி ஆய்வாளர் மற்றும் ஆணையரிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இரவு நேரங்களில் சிறுத்தை போன்ற விலங்குகள் வால்பாறை டவுன் பகுதிகளில் அதிக அளவு சுற்றி திரிகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அருள்மிகு சுப்பிரமணி சாமி திருக்கோயில் வளாகம், காந்தி சிலை அருகாமை, மார்க்கெட் பகுதி, ஸ்கேன் மோர் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தெரு விளக்குகளை சரி செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
-திவ்யக்குமார்.













