கோயம்புத்தூர் சின்னியம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று மாணவர்களின் நலன் கருதி, மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் தொடக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.கோவை சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்தத் தொடக்க விழா நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பள்ளியின் உள்கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளை, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ராயல்கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் தலைவரும், நிர்வாக இயக்குநரும், மற்றும் உயிரின் சுவாசம் அறக்கட்டளையின் நிறுவனருமான Dr. க. மாதேஸ்வரன், M.Ch., அவர்கள் முறைப்படி தொடங்கி வைத்தார்.”சுற்றுப்புறத் தூய்மை!! ஆரோக்கிய வாழ்வு!!” என்ற உன்னத நோக்கத்தோடு, பள்ளி மாணவர்களிடையே தூய்மையையும் நல்வாழ்வையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ராயல்கேர் மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.













