கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட்டின் 3-ஆம் ஆண்டு விழா : ஜூன் 11 முதல் 14 வரை ‘பிளாட் 50% மெகா விற்பனை’ அறிவிப்பு!!

கோவையில் செயல்பட்டு வரும் லுலு ஹைப்பர் மார்க்கெட் தனது 3-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு ‘பிளாட் 50% மெகா விற்பனை’ சலுகையை அறிவித்துள்ளது. ஜூன் 11 முதல் 14 வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் விற்பனை விழா, தினமும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நீட்டிக்கப்பட்ட நேரத்தில் நடைபெறவுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


மூன்று ஆண்டுகளாக கோவை மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றிகரமாக இயங்கி வரும் லுலு ஹைப்பர் மார்க்கெட், தனது 4-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தருணத்தை சிறப்பிக்கும் வகையில் இந்த சலுகை விற்பனையை ஏற்பாடு செய்துள்ளது.

ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் மகேசன், பொது மேலாளர் பாலாஜி, கொள்முதல் மேலாளர் சுனில் மேனன் மற்றும் சூப்பர் மார்க்கெட் மேலாளர் சின்னதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.
இந்த சிறப்பு விற்பனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு பொருட்களுக்கு நேரடி 50 சதவீத தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. குறிப்பாக மொபைல் போன்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அத்தியாவசிய மளிகைப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள் மற்றும் ஆடை வகைகளுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகளும் ஆண்டுவிழா சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. குடும்பத்துடன் நிதானமாக ஷாப்பிங் செய்ய வசதியாக கடை நள்ளிரவு 1 மணி வரை திறந்திருக்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“கடந்த மூன்று ஆண்டுகளாக கோவை மக்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றியை வெளிப்படுத்தும் விதமாக இந்த மெகா விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக சேமிப்புடன் சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்” என்று லுலு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விற்பனை விவரங்கள் நாட்கள் ஜூன் 11 முதல் 14 வரை (4 நாட்கள்) நேரம் காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 1.00 மணி வரை Lulu Hypermarket Coimbatore விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts