தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது!!

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் இயக்குனர் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் அந்தந்த பகுதி மக்களுக்காக அந்தந்த நிலையங்களில், வாங்க கற்றுக் கொள்வோம் என்ற தலைப்பில் பொது மக்களுக்கு தீ பாதுகாப்பு வகுப்பு நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தன் ஒரு பகுதியாக விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில், நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்கள், கடந்த இரு நாட்களாக(06-06-26& 07-06-26) வாங்க கற்றுக் கொள்வோம் என்ற நிகழ்ச்சியின் மூலம் தீ பாதுகாப்பு, தீயின் வகைகள், தீயை அணைப்பது எங்கனம், தீயணைப்பான்களை இயக்கும் முறை, LPG கேஸ் தீ விபத்து, மின்சார தீ விபத்து, வாகன தீ விபத்து, பட்டாசு தீ விபத்து ஆகியவை குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. தீயணைப்புத் துறையினர் பயன்படுத்தும் சாதனங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் பொது மக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது . இதில் விளாத்திகுளம் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் 200 பேர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts