
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று சந்தித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
4 நான்கு முறை அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளராகவும், கட்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்த கடம்பூர் ராஜூ, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு சென்று தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார்.
அதனையடுத்து, கடம்பூர் ராஜூ தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், “சுயநலவாதி, துரோகி கடம்பூர் ராஜூ ஒழிக” என அதிமுக., கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், அதிமுகவை விட்டுச் சென்ற துரோகிகளின் மத்தியில் உண்மை விசுவாசிகள் நாங்கள் இருக்கிறோம் என்று எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன் மற்றும் மோகன் தலைமையில் சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.













