வால்பாறை கூழாங்கல் ஆற்றில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள் வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து என சமூக ஆர்வலர்கள் கவலை!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகிலுள்ள புகழ்பெற்ற கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளால் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் வனவிலங்குகளின் உயிருக்குக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அடர்ந்த வனப்பகுதியும் பசுமை நிறைந்த சூழலும் கொண்ட கூழாங்கல் ஆற்றுப்பகுதிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகளின் வருகையை ஒட்டி சாலையின் இருபுறமும் தள்ளுவண்டி கடைகள் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.

ஆனால் இங்கு வரும் சில பொறுப்பற்ற சுற்றுலாப் பயணிகளும் வணிகர்களும் தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் உறைகள் நெகிழிப் பைகள் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவுக் கழிவுகளை ஆற்றோரங்களிலும் சாலையோரங்களிலும் ஆங்காங்கே வீசிவிட்டுச் செல்கின்றனர்.

​இவ்வாறு கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உணவென்று நினைத்து யானை மான் போன்ற வனவிலங்குகள் உட்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விலங்குகளுக்கு
​கடுமையான செரிமானக் கோளாறுகள் ஏற்படுதல்
​உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுதல்
​எதிர்பாராத உயிரிழப்புகள் நேரிடுதல்
​போன்ற ஆபத்துகள் உருவாகி இப்பகுதியின் ஒட்டுமொத்த வன உயிரியல் சமநிலையே சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

வனத்துறையினருடன் இணைந்து தன்னார்வலர்கள் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தொண்டு அமைப்புகள் பலமுறை இப்பகுதியில் தீவிர தூய்மைப் பணிகளை மேற்கொண்டு குப்பைகளை அகற்றியுள்ளனர். இருப்பினும் விழிப்புணர்வு இல்லாத சிலரின் செயலால் மீண்டும் மீண்டும் அதே இடங்களில் குப்பைகள் குவிக்கப்படுவது வேதனைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

வனத்துறை சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் வணிக நோக்கில் செயல்படும் சில கடைகளும் சுற்றுலாப் பயணிகளும் அதை முழுமையாகப் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை விடுத்துள்ள கோரிக்கைகள்
​கட்டாய குப்பைத்தொட்டிகள் சாலையோரக் கடை நடத்துபவர்கள் தங்களது கடைகளின் அருகில் கட்டாயமாகக் குப்பைத்தொட்டிகளை வைக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் குப்பைகளை அதிலேயே போடுவதை உறுதி செய்ய வேண்டும்.
​அரசின் உடனடி நடவடிக்கை சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அகற்றி நகராட்சியிடம் ஒப்படைக்கும் நடைமுறையை வால்பாறை நகராட்சி நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.

வனவிலங்குகளையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
​காடு காப்போம் வனவிலங்குகளை பாதுகாப்போம் பிளாஸ்டிக் இல்லா இயற்கையை உருவாக்குவோம் என்ற சிந்தனையோடு

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணைத் தலைமை நிருபர்
உங்கள்
𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts