அ.தி.மு.கவின் கொடி இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு உயரத்தில் பறக்கும் என்று சென்னார்…..

1979 -செப்டம்பர் 14 ல் வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவின் கொடி இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு உயரத்தில் பறக்கும் என்று சென்னார்.

அண்ணாவின் புகழ்  நிலைத்து நிற்கும்
யாராலும் அழிக்க முடியாது
அழிக்க நினைப்பவர்கள் கணவு
பலிக்காது என்றார்.

அண்ணாவின்திட்டங்களை கொள்கைகளை அ தி மு க
முன்னெடுத்து செல்லும் என்றார்.

-ஆனால் இன்று-

2019 பாராளுமன்ற தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 39 தொகுதிகளை இழந்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

2021 ஏப்ரல் 6-தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

2021 டிசம்பரில் ஊரக உள்ளாட்சி தேர்தலிலும்  படுதோல்வி அடைந்தது
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

2022 நகர் புற உள்ளாட்சித் தேர்தலிலிலும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை புதை குழியில் தள்ளினார்கள்.

தொடர்ந்து 4 தேர்தல்களிலும்
புரட்சித் தலைவரின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தோல்வி அடைந்தது.

{OPS- EPS}-என இரண்டு பீஸ்போன துரோகிகளால் கழகம்அழிவுப்பாதையில்
சென்று விட்டது
என்பதை உணர்ந்து விசுவாசம் மிக்க
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
உண்மை தொண்டர்கள் வேதனையிலும் கடும் கோபத்திலும் இருக்கிறார்கள்

தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத தலைவர்கள் தொண்டர்களை எப்படி காப்பாற்ற முடியும்.

1972-ல் இருந்து பல உயிர்கள்
பலி கொடுத்து பல ஆயிரம்
தொண்டர்கள் ரத்தம் சிந்தி  1977-ல் ஆட்சியை அமைத்த புரட்சித் தலைவர் MGR- எனும் புனிதரால் உருவாக்கப் பட்ட இயக்கம் அழிந்து கொண்டு இருப்பதை  உன்மை தொண்டர்களால் இனியும் வேடிக்கை பார்க்க முடியாது.
புரட்சித் தலைவர் புகழ் என்றும் வாழும்…


 -எம்ஜிஆர்நேசன்.

Leave a Comment

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts