திருப்பூர் தாராபுரம் செல்லும் சாலையில் உள்ள பொள்ளிகளிபாளையம் பிரிவு அருகே சாக்கடை கால்வாயில் சூட்கேஸ் ஒன்று அநாதையாக கிடப்பதாக ஊரக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சாக்கடையில் வீசப்பட்டிருந்த சூட்கேஸை மீட்டனர். சூட்கேஸை திறந்தபோது கழுத்தை அறுத்து கொலை செய்து வைக்கப்பட்டிருந்த 25 வயது உடைய பெண்ணின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அந்த சடலத்தை 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண் யார் அவரது ஊர் உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
-M.சுரேஷ்குமார்.