தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து அனைத்து கட்சிகளும் கொங்கு மண்டலத்தின் மேல் மிகவும் கவனிப்புடன் தேர்தல் களத்தில் இறங்க கட்சியினர் இருக்கின்றனர்.
நாட்கள் மிகவும் குறைவாக உள்ள காரணத்தால், அனைவரும் இப்போதே தங்கள் பிரச்சாரத்தையும் வாக்கு சேகரிப்பில் அனைத்து வார்டுகளிலும் தொடங்கிவிட்டனர். இது ஒருபுறமிருக்க பிஜேபி வேட்பாளரை ஆதரித்து ஓட்டு சேகரிக்க வந்த வேலூர் இப்ராஹிம், குறிச்சி பகுதியில் மக்களால் விரட்டி அடிக்கப்பட்டார்.
ஆகையால் சிறிது நேரம் வாகனங்கள் நெரிசல் ஏற்பட்டது. மேலும் பதட்டமான சூழ்நிலை ஏற்படும் சூழல் இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து போலீஸ் படை இறக்கி பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்வதை தடுக்க காவல்துறையினர் பாதுகாப்பு பனியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-பாஷா.