நடைபெற இருக்கும் மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தலில் 22வது வார்டு சேரன்மாநகர் பகுதியில் திமுக வேட்பாளராக திரு கோவை பாபு (எ) செல்வகுமார் களத்தில் உள்ளார். இவர் திராவிடன் அறக்கட்டளை என்ற பொது நிறுவனத்தை நடத்தி, மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். இளைஞர் மற்றும் பெண்கள் மத்தியில் இவருக்கு பெரும் வரவேற்பும் நன் மதிப்பும் அதிகம் என்று கூறப்படுகிறது.
திமுக தலைமையிலும் இவருக்கு ஒரு நல்ல அங்கீகாரம் உள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க இவருக்கு எதிராக தம்பி அண்ணன் (எ) சண்முகசுந்தரம் அ.தி.மு.க சார்பில் களம் காண உள்ளார். போட்டி சற்று கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்த்தாலும், தி.மு.க வெற்றி பெறும் என்ற ஒரு சூழல் இங்கு அமைந்துள்ளதாக மக்கள் தங்கள் வியூகங்களை தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-சாதிக் அலி.