கோவையில் டாக்டர் மகாலிங்கம் விருது விழா நடைபெற்றது!!

கோவை, தொழிலதிபர் மகாலிங்கம் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரியில், ‘அருட்செல்வர் மகாலிங்கம்’ விருது வழங்கும் விழா நடந்தது.

கோவை, சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரியில் தொழிலதிபர் மகாலிங்கம் நுாற்றாண்டு விழா, கடந்த 17-ம் தேதி முதல் நடந்து வருகிறது.

இதையடுத்து கல்லூரியில் கலை, இலக்கிய, விளையாட்டு போட்டிகள் இரண்டு நாட்களாக நடந்தது. இந்நிலையில், முக்கிய நிகழ்வாக, அருட்செல்வர் மகாலிங்கம் விருது வழங்கும் விழா நடந்தது.

குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்கினார். பிரிக்கால் நிறுவனர் விஜய் மோகன், ரூட்ஸ் குழுமத்தின் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில், டி.வி.எஸ்., குழுமங்களின் நிறுவன தலைவர் வேணு சீனிவாசனுக்கு நா.மகாலிங்கம் விருது-2022 வழங்கப்பட்டது. தொழில், ஆய்வு, சமூக முன்னேற்றத்தில் அவரின் பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

டி.வி.எஸ்., குழுமங்களின் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் பேசுகையில், ” அருட்செல்வர் மகாலிங்கம் விருதினை அவரின் நூற்றாண்டு விழாவில் பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. அருட்செல்வர் போன்ற மனிதர்களை தற்போது பார்க்க முடியாது. மிக எளிமையான மனிதர். பழக இனிமையானவர். ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். மாணவர்கள் தான் நம் எதிர்காலம். மாணவர்கள் பட்டம் வாங்கினால் மட்டும் போதாது, தொடர்ந்து பல விஷயங்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். உங்களின் ஆசிரியர்கள் நினைவு கூற வேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில், கிரியா ஆய்வு நிறுவனம் சார்பில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு சமூக மாற்றம், புது கண்டுபிடிப்பு துவங்க ரூ.10 கோடி நிதியில் ஆய்வு மையம் துவக்கப்பட்டது. இது தொழில் முனைவோர், கல்வி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பங்களிப்புடன் செயல்பட உள்ளது. சுற்றுப்புற சூழல், வாழ்வாதாரம், சமூக பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளனர்.

– சீனி,போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts