சமூக வலைத்தளத்தில் அவதூறு; ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கைது!!

சமூக வலைத்தளத்தில் அவதூறு; ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கைது.

விக்கிரமசிங்கபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கோபால் மகன் கார்த்திக் (வயது 27). ஆர்.எஸ்.எஸ். பிரமுகர். இவர், பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு மேலே உள்ள கோவிலில் வெள்ளத்தில் சிலை அடித்து செல்லப்பட்டு இருந்ததை வனத்துறையினர் இடித்ததாக சமூக வலைத்தளத்தில் அவதூறாக பதிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் சிறுமி தற்கொலை வழக்கிலும் சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீசார் போக்சோ உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்தனர். பின்னர் அவரை அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நாங்குநேரி சிறையில் அடைத்தனர்.

நாளைய வரலாறு செய்தியாளர்

-அன்சாரி, நெல்லை. 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts