காட்பாடியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது!!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது. 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விருதம்பட்டு போலீசார் நடவடிக்கை

வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் காட்பாடி விருதம்பட்டு உதவி ஆய்வாளர்கள் ஆதர்ஷ் ராமமூர்த்தி மற்றும் காவலர்கள் விருதம்பட்டு விஷ்ணு திரையரங்கம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகம் அளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர் அப்போது அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார் இதனையடுத்து அவனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அவன் காட்பாடி வசந்தபுரம் பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் மணிவண்ணன் என்பதும் இவன் வேலூர் காட்பாடி ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது இதனையடுத்து அவன் திருடி வைத்திருந்த சுமார் 4 லட்சம் மதிப்புள்ள ஆறு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் பறிமுதல் செய்து மணிவண்ணனை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர் பறிமுதல் செய்யப்பட்ட ஆறு இருசரக்கர வாகனங்களில் இரண்டு வாகனங்களை ஆந்திர போலீசாரிடம் ஒப்படைத்தனர்

-P. இரமேஷ் வேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts