ஆழியார் அணையில் மீண்டும் படகு சவாரி வேண்டும் சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு..!!

ஆழியாரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பூங்கா, அணை உள்ளது.தினந்தோறும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் பூங்காவின் அழகை ரசிக்கவும், கடல்போல் விரிந்து பரந்து கிடக்கும் அணை நீரில் படகு சவாரி செய்து மகிழவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

குறிப்பாக சனி ஞாயிறு மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் இங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது உண்டு. இதன்மூலம் பொதுப்பணித்துறைக்கும் ஆழியார் அணையில் இயக்கப்படும் படகுசவாரிக்கு 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூ .30-ம் 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ 40-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் கோட்டூர் பேரூராட்சி வருமானம் கிடைத்து வந்தது.

இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட பின் படகுசவாரி நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்ட பின்னும் படகு சவாரி தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் அணையில் படகு சவாரி செய்து மகிழ வரும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் மேலும் கோட்டூர் பேரூராட்சிக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே மீண்டும் அணையில் படகு சவாரி தொடங்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-அலாவுதீன் ஆனைமலை.

Leave a Comment

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts