கணவரை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்தார்!!

பொள்ளாச்சி:பொள்ளாச்சியை அடுத்த வடக்கிபாளையம் தண்ணீர் தொட்டி வீதியைச் சார்ந்தவர் வினோத்குமார் (36). பாம்பு பிடிப்பது மற்றும் கால்நடைகளுக்கு பாரம்பரிய முறையில் வைத்தியம் செய்து வருகிறார்.இவரது மனைவி மகாலட்சுமி தையல் தொழில் செய்து வருகிறார்.

இத்தம்பதியினருக்கு கிஷோர்,நட்சத்திரா என இரு குழந்தைகள் உள்ளனர்.குடிப்பழக்கம் உள்ள வினோத்குமார் மனைவியின் நடத்தையில் சந்தேகபட்டு அடிக்கடி சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த மகாலட்சுமி தையல் தொழிலுக்கு பயன்படுத்தபடும் கத்திரிக்கோலை எடுத்து வினோத்குமாரின் நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளார்.

வலியால் துடித்த வினோத்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

கத்திரியால் குத்தியதில் கணவர் உயிரிழந்து விட்டார் என்ற தகவல் அறிந்த மகாலட்சுமி வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!!

நாளையவரலாறு
செய்திக்காக

அலாவுதீன் ஆனைமலை

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts