கோவையில் தடுப்புச்சுவரில் காா் மோதி ஒருவர் பலி, 3 பேர் காயம்!!

கோவை நஞ்சுண்டாபுரம் அருகே உள்ள சந்தோஷ் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் கவுசிக் (21). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த பிரீத்வி (20). கல்லூரி மாணவர். கவுசிக்கின் உறவினர் கனிஷ்கா, அவரது தோழி நிவேதா. இவர்கள் 4 பேரும் பீஸ்ட் படம் பார்ப்பதற்காக ஒரு காரில் அதிகாலை 2.45 மணியளவில் வாலாங்குளம் உக்கடம் பைபாஸ் ரோட்டில் சென்றனர். காரை கவுசிக் ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. பின்னர் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டிச் சென்ற கவுசிக் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். பிரீத்வி, கனிஷ்கா, நிவேதா ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவுசிக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts