சிங்கம்புணரி அருகே மூவர் மீது கொலைவெறித் தாக்குதல்! தாய், மகன் கைது!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள சாத்தினிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் மணி (40). இவருக்கும் இவரது தந்தையுடன் பிறந்த சித்தப்பா மாணிக்கம் (60) என்பவருக்கும் சொத்து பாகம் பிரிப்பதில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.

நேற்று காலை உறவினர்களிடையே இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்த நிலையில் திடீரென்று தனது வீட்டுக்குச் சென்று அரிவாளை எடுத்து வந்த மணி தனது சித்தப்பா மாணிக்கம், அவரது மனைவி பஞ்சு, மகள் ஜெயா ஆகியோரை சரமாரியாகவும், கொடூரமாகவும் வெட்டியுள்ளார்.

பலத்த காயமுற்று இரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த மாணிக்கம், பஞ்சு மற்றும் ஜெயா ஆகியோரை சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, அதன்பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே, சித்தப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய மணியை திருப்பத்தூர் அருகே பிடித்த காவல்துறையினர், விசாரணை செய்ததில் சம்பவத்தில் அவரது தாய் அமிர்தம் (60) என்பவரின் தூண்டுதல் இருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர் சிங்கம்புணரி நடுவர் நீதிமன்றத்தின் முன் நேர் நிறுத்தி, அதன்பின் சிறையில் அடைத்தனர்.

– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts