டாடா குழுமத்தின் தனிஷ்க் ஜுவல்லரியின் புதிய கிளை பொள்ளாச்சியில் இன்று துவங்கப்பட்டுள்ளது.!!

பொள்ளாச்சி-கோவை சாலையில் தனிஷ்க் ஜுவல்லரியின் 45வது புதிய கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது.இந்த புதிய கிளையை தனிஷ்க் ஜுவல்லரியின் ரீடெயில் தலைவர் விஜேஸ்ராஜன், தமிழக ரீடெயில் தலைவர் நரசிம்மன், அம்பாள் குரூப்ஸ் உரிமையாளரும், கிளை உரிமையாளருமானஅசோகன் முத்துசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து தனிஷ்க் ஜுவல்லரியின் ரீடெயில் தலைவர் விஜேஸ்ராஜன், தமிழக ரீடெயில் தலைவர் நரசிம்மன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்த நிறுவனம் டாடா நிறுவனத்தின் ஒரு அங்கமாகும். நாடு முழுவதும் 220 நகரங்களில் 385 கிளைகள் உள்ளன.

தமிழகத்தில் 45 கிளைகள் உள்ளன. கோவை நகரி 2 கிளைகளும் பொள்ளாச்சியில் இந்த புதிய கிளையும் செயல்படுகிறது.3ஆயிரம் சதுரடி பரப்பளவில், 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட டிசைன்கள் எங்களிடம் உள்ளன. எக்ஸ்சேஞ்ச்க்காக வருபவர்களுக்கு 100 சதவீத தொகையை கொடுக்கிறோம்.கிளை திறப்பின் அறிமுக சலுகையாக தங்க நகைகள் கிராமுக்கு ரூ.75 தள்ளுபடியும், வைர நகைகளுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.தங்கத்தின் தரத்தை அறியும் கேரட் மீட்டர், தங்க நகைகளை சேமிக்கும் திட்டம், இலவச சர்வீஸ் வசதிகள் உள்ளன. தங்கம் நுகர்வில் தமிழகம் முதன்மையாக உள்ளது. எங்களது நிறுவனத்தின் 10 சதவீத விற்பனை தமிழகம் கொடுக்கிறது.

– சீனி,போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts