மகுடஞ்சாவடியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்!!

மிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் மகுடஞ்சாவடி வட்டார அளவிலான சுகாதார திருவிழா மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் TM.செல்வகணபதி MA,LLB,Ex.MP அவர்கள் சுகாதார திருவிழா முகாமை தலைமையேற்று தொடங்கி வைத்தார். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் AKP.சின்ராஜ் BSC, MP, மகுடஞ்சாவடி வட்டார மேலாண்மை முகமை திட்ட குழு தலைவர் (அட்மா) திரு க.பச்சமுத்து, இடங்கணசாலை நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து குத்துவிளக்கேற்றிவைத்தனர்.

காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடந்த சுகாதார திருவிழாவில், கண், காது, மூக்கு தொண்டை, பல் பரிசோதனை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம், வாய் புற்றுநோய், காசநோய் பரிசோதனை, மருந்து வழங்குதல், தாய் மற்றும் குழந்தை நலம், மக்கள் நல பதிவு, தடுப்பூசி செலுத்துதல், ஆயுஷ்மான் பாரத் மற்றும் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்ட முகாம், ரத்த தானம் உள்ளிடவை நடந்தது.

இந்த மாபெரும் மருத்துவ திருவிழாவில் திமுக பொதுக்குழு உறுப்பினர் க.அன்பழகன், கொங்குநாடு மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் திரு சரவணன், திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திரு கண்ணன், இடங்கணசாலை துணை தலைவர் தளபதி தொண்டரணி, அமைப்பாளர் செல்வம், இளைஞரணி பழனியப்பன், மகுடஞ்சாவடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குமார் ( எ) பச்சமுத்து
பொன்.புஷ்பநாதன், SSS சரவணன், கே.பி.வேல்முருகன், ராஜாகவுண்டர் மாதையன், மோகனவேல்,மகுடஞ்சாவடி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் TPK.முத்துசாமி MBBS.
மருத்துவ அலுவலர்கள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள். சுகாதார பணியாளர்கள். அங்கன்வாடி பணியாளர்கள். பொதுமக்கள் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
-கலையரசன் மகுடஞ்சாவடி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts