மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

மோடி அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து இடது சாரிகட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்!

எரிபொருட்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்வு, லாபம் கொழிக்கும் எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது, கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, வேலையின்மை, மூலப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்வால் சிறுகுறு தொழில்கள் நெருக்கடி போன்ற அரசின் மக்கள் விரோத நடவடிக்கையால் இந்திய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பாஜக ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து நாடுமுழுவதும் எழுச்சிகரமான போராட்டங்களை நடத்துவது இடதுசாரி கட்சிகள் அறைகூவல் விடுத்தது. இதன்ஒருபகுதியாக தமிழகத்தில் சிபிஎம், சிபிஐ, சிபிஎம்எல் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இணைந்து தமிழகம் முழுவதும் மே25 ஆம்தேதி முதல் மே30 ஆம்தேதிவரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது. இதன்தொடர்ச்சியாக கோவை கணபதி ‘பேருந்து நிலையம் முன்பு நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர். நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் எம். ஆறுமுகம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

இதேபோன்று கோவை சிவானந்த காலணியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி. பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வராஜ், விசிக குரு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். இதேபோன்று பீளமேடு, சுந்தராபுரம், துடியலூர் உள்ளிட்ட பகுகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் வி. எஸ். சுந்தரம், சிபிஐஎம்எல் மாவட்ட செயலாளர் தாமோதரன் மற்றும் இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரளானோர் பங்கேற்று மோடி அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது!!!

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப் கோவை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts