ஆனைமலை வட்டம் வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி தம்மம் பதி கல்லாங்குத்து பகுதிகளில் வாழுகிற நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது பகுதியில் தங்களுக்கு மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டித் தருவதாகச் சொல்லி தரமற்ற அஸ்திவாரத்தை அமைத்து தங்களை ஏமாற்றிய வாகை சேவை அறக்கட்டளையின் மீது நடவடிக்கை கோரியும்,, அஸ்திவார துடன் 5 வருடங்களாக வெறுமனே கிடைக்கிற தங்களது வீட்டுமனைகளை தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து பாதுகாப்பான முறையில் அரசே கட்டித் தரவேண்டும் என்று ஆனைமலை வட்டாட்சியர் உயர்திரு, பானுமதி அவர்களிடம் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் தோழியர், அம்சவேணி தலைமையில் நேற்று மனு அளித்தனர்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோவை மாவட்ட தலைவர், VS. பரமசிவம்,, ஒன்றியக்குழு தலைவர், A. அம்மாவாசை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனைமலை தாலுகா குழு உறுப்பினர்கள், R. தங்கவேல், A. முத்துச்சாமி, ஆகியோர் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.