கோவையில் பெண்களுக்கான சட்டங்களில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்த மாவட்ட அளவிலான மாநாடு நடைபெற்றது.

கோவை காரமடை பகுதியில் குட்செப்பர்டு தொண்டு நிறுவனம் 1977 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கான சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த தொண்டு நிறுவனம் சார்பாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பெண்கள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள், வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து மாவட்ட அளவிலான மாநாடு நடைபெற்றது.

தொண்டு நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் சிஸ்டர் அனிலா மேத்யூ துவக்கி வைத்த இதில் புரொவென்சியல் கவுன்சிலர் சிஸ்டர் செலின் மற்றும் வருமான பெருக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆண்டனி பீட்டர் வரவேற்புரையாற்றினர்.

தொடர்ந்து இந்த மாநாட்டில் வழக்கறிஞர்கள் ரீனா மற்றும் அறிவரசு ஆகியோர் பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் நீதி கிடைப்பதில் பெண்களுக்கான வாய்ப்புகள் சவால்கள் குறித்து விளக்கினர். தொடர்ந்து பெண்களுக்கான நீதி தாமதமின்றி கிடைப்பதற்கான சட்டங்கள் மற்றும் நீதிகள் சமூக-பொருளாதார பாகுபாடற்ற நீதி ,அடிமட்ட மக்களுக்கு கிடைப்பதற்கான வழி முறைகள், தொடர்பான விவாதங்களுக்கான பதில்களும் நெறிமுறைகளையும் பங்கேற்றவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

இதில் கோவை ,நீலகிரி ல்,ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதியில் இயங்கி வரும் தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் சட்ட வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் கல்லூரி பயிற்றுநர்கள் தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

– சீனி,போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts