நமது கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அதன் அருகில் இருக்கும் ஏரியாக்களின் நிலையோ மிக மோசமானதாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டிக்காக வண்ண வண்ண விளக்குகள் ஜொலிக்கிறது – அருகில் உள்ள பகுதி மக்களோ தெரு விளக்கு இல்லாமல் தவிக்கின்றனர். ஸ்மார்ட் சிட்டிக்காக பளபளக்கும் சாலைகள் போடப்படுகிறது – அருகில் உள்ள பகுதி மக்களோ குண்டும் குழியுமான தெருக்களில் தடுமாறுகின்றனர். ஸ்மார்ட் சிட்டிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது – அருகில் உள்ள பகுதி மக்களுக்கு சாக்கடை கலந்த குடிநீரே கிடைக்கின்றது.
கோவை மாநகராட்சியின் -வது வார்டுக்கு உட்பட்ட இலாஹி நகர், பாத்திமா நகர் 1, 2, 3, 4. ராஜீவ் நகர் குறுக்கு சந்து, ஆப்பிள் கார்டன், பிஸ்மி நகர். வள்ளல் நகர் ஆகிய பகுதிகளில் தார்
சாலை அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டது. ஒவ்வொரு பகுதிகளுக்கும் தனித்தனியான தொகைகள் ஒதுக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டது. அதில் வள்ளல் நகர் தவிர 84- வதுவார்டுக்குட்பட்ட எந்த பகுதியிலும் சாலை பணிகள் மேற்கொள்ளவில்லை. கடந்த ஆண்டு மழை காலங்களில் சாலை வசதி இல்லாமல் மக்கள் மிகவும் சிரம்பட்டனர். தற்பொழுதும் மக்கள் குண்டும் குழியுமான சாலைகளில் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
மேலும் குடிநீர் குழாய் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கோடை காலங்களில் லாரி தண்ணீர் வராமல் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் தெரு விளக்குகள் இல்லாத பகுதிகளில் இரவு நேரத்தில் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் தெரு நாய் தொல்லையினாலும் எங்கள் பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். ஆகவே மழைகாலம் வருவதற்குள் உடனடியாக சாலை பணிகளை முழுமைப்படுத்தி தர வேண்டுமெனவும், குழநீர், தெருவிளக்கு உடனடியாக அமைத்து தர வேண்டுமெனவும், தெரு நாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
– சீனி,போத்தனூர்.