பொள்ளாச்சியில் BSNL அலுவலகத்தை முற்றுகையிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியினர் போராட்டம்…!!!

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திப் பேசிய பாஜகவின் நிர்வாகிகள் நுபுர் சர்மா, மற்றும் நவீன் ஜிண்டால், ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தியும், அதற்காக குரல் கொடுத்த உத்திரப்பிரதேச மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்த பாஜக அரசை கண்டித்தும், அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், ஆந்திர மாநிலம் கோன சீமா மாவட்டம் அம்பேத்கர் மாவட்டமாக தொடர்ந்திட வலியுறுத்தியும், கோவை மாவட்டம், மாநிலச்செயலார் கோவை ஜாபர்அலி கண்டன உரைநிகழ்த்தினார்.

பொள்ளாச்சி நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பி.எஸ்.என்.எல் (BSNL) அலுவலகம் முற்றுகை போராட்டம் நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் சம்சுதீன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சிங்கை சுலைமான், அனிபா, ஜாபர் சாதிக், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் MH.ஜாபர் அலி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக வெல்ஃபேர் பார்ட்டி மாநில துணைத்தலைவர் மணிமாறன், பிரெட்டர் நிட்டி இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் மதி. அம்பேத்கர், விடுதலை சிறுத்தை கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் பிரபு, விசிக நகர செயலாளர் சங்கர், காங்கிரஸ் பிரமுகர் பஞ்சலிங்கம், நாம் தமிழர் கட்சி சுரேஷ்குமார் ஆகியோர் கண்டன கோஷங்களை முழங்கினர்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் பாஜக அரசின் மதவாத நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டனர் அப்போது காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் காணப்பட்டது.

போராட்டத்தில் இளைஞரணி மாவட்ட பொருளாளர் பைசல் ரஹ்மான், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜ்தீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செபீக், தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் சமீர், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், மாவட்ட துணைச் செயலாளர் காஜா, பொள்ளாச்சி நகர பொருளாளர் அப்துல் காதர், நகர துணைச் செயலாளர்கள் அன்சர், முகமது நசீர், ஆனைமலை ஒன்றிய பொறுப்பாளர் அலாவுதீன், மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி , கிளை கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர் ..

நாளைய வரலாறு செய்திக்காக,

-அலாவுதீன், ஆனைமலை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts