கோவை மாவட்டம் பொள்ளாச்சி தமிழக கேரள எல்லைப் பகுதியான பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பெருமாட்டி கிராம பஞ்சாயத்து மீனாட்சிபுரம் பேருந்து நிலையம், குடியிருப்புப் பகுதி, குழந்தைகள் ஹாஸ்டல் உள்ள பகுதியில் செடி கொடிகளுடன் புதர்கள் ஏற்பட்டுள்ளது.
இதில் பாம்புகள் இருப்பதாக கூறும் பொதுமக்கள் இவ்வழித்தடத்தில் நடக்கும் பொழுது மிகுந்த பயத்துடனும் அச்சத்துடனும் கடப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும் இப்பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு பெருமாட்டி பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக இப்பகுதியை சரி செய்து கொடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக
-M.சுரேஷ்குமார்.