சாம்பவார்வடகரையில் மொபைல் போன் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

    தென்காசி மாவட்டம் சாம்பவார்வடகரையில் பெண்களுக்கான மொபைல் போன் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆமினா அரபி பாடசாலையில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சாம்பவர் வடகரை மஸ்ஜிதுன் நூர் ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி தலைவர் பக்ருதீன் தலைமை தங்கினார்கள். பள்ளிவாசல் இமாம் மவ்லவி சேக் முஹம்மது கிராத் ஓதினார்கள்.
அர்ரஹ்மான் திருமண தகவல் மைய நிர்வாகி சகோதரர் அன்சாரி அவர்கள் காணொளி காட்சிகள் மூலம் மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் கேடுகள்,பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்,குழந்தை வளர்ப்பு போன்ற பல செய்திகளை அழகிய முறையில் எடுத்துரைத்தார்கள்.

ஒவ்வொரு மாதமும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி எங்கள் ஊரில் நடத்த வேண்டும் என்று ஜமாத்தார்கள் கோரிக்கை வைத்தார்கள்.

நாளைய வரலாறு செய்தியாளர்

-அன்சாரி நெல்லை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts