பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்த கல்வெட்டு பலகை அவமதிப்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனையில் 12.6.2015 தமிழக அரசு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் அன்றைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால்
திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் அக் கட்டடத்தின் கல்வெட்டு பலகை எந்தவித சேதாரமுமின்றி கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பொலிவுடன் இருக்கும் நிலையில் கல்வெட்டு பலகையில் துடப்பம் வைத்தும், காலனியை கழட்டி விட்டும்,குப்பைகளை அப்புறப்படுத்தாமல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவை அவமதிக்கும் செயலாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts