ஒரு கிலோ வெறும் ஒரு ரூபாய் தான்… அசத்தப் போகும் தூத்துக்குடி மாநகராட்சி..!

   குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் நுண் உரங்களை விற்பனை செய்யும் வகையில் முத்துரம் என்ற லோகோவை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பைகளில் இருந்து நுண் உரம் தயாரிக்கும் முயற்சி பிராண்டட் செய்வதற்காக “முத்துரம்” என்ற பெயரில் லோகோ வெளியிட்டனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

ஒரு கிலோ உரத்தை வெறும் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து எடுக்கப்படுகின்றன. அதில் மக்கும் குப்பைகளை கொண்டு விவசாயத்துக்கு தேவையான நுண் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உரத்தை ஒரு கிலோ உரம் ஒரு ரூபாய் என்று வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் நடைபெற்று வரும் விவசாயப் பணிகளுக்கும், மற்ற விவசாயிகளுக்கும் நுண் உரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி ”முத்துரம்” என்ற பெயரில் லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது. இதுதொடர்பான நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மேயர் ஜெகன் பெரியசாமி உரத்திற்கான லோகோவை அறிமுகம் செய்து வைத்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வேல்முருகன் தூத்துக்குடி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts