நாட்டின் 75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா நேற்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள செயிண்ட் ஜோசப் மகளிர் கலை – அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின அமுதப்பெருவிழாவில் கலந்து கொண்ட சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து தேசியக்கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி முனைவர் மார்க்ரெட் பாஸ்டின் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பேரூராட்சி துணைத்தலைவர் இந்தியன் செந்தில், முனைவர் S.S.மணியன் மற்றும் அருட்தந்தை பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாணவிகள் அணிவகுப்பு நடத்தி, தேசியக்கொடிக்கு மரியாதை செய்தனர். கலை நியமிக்க நடனங்களை உற்சாகமாக நிகழ்த்திக் காட்டினர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் வாழ்வில் சில நிகழ்வுகளைக் குறிக்கும் நாடகம் ஒன்றும் மாணவிகளால் அரங்கேற்றப்பட்டது. இறுதியாக, ஒன்றிய நாட்டுப்பண் பாடலுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.