சில தினங்களுக்கு முன் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில், 5-ரூபாயாக இருந்தஆடு அறுவைக்கு 100 ரூபாயும் 10-ரூபாயாக இருந்த மாடு அறுவைக்கு, 250-ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்து, மாநகராட்சி கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், கோவை மாநகர் மாவட்ட மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கம் சார்பாக கோவை ஆத்துப்பாலத்தில் அறுவை கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பல ஆண்டுகளாக அறுவை கட்டணமாக பத்து ரூபாய் மட்டுமே இருந்த நிலையில் தற்போது ஒரேயடியாக 250 ரூபாய் உயர்த்தியுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், இதனால் மாட்டிறைச்சியின் விலை உயரக் கூடும் எனவும் கூறி மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்க தலைவர் நிம்மதி இஸ்மாயில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், கட்டணத்தை குறைக்கக்கோரி, ஏற்கனவே மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாகவும், கட்டணத்தை குறைக்காவிட்டால்தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்மாட்டிறைச்சி வியாபாரிகள் தெரிவித்தனர். இதில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சையது காதர், குறிச்சி.